June 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சர்களுக்கு சமாந்திரமான அந்தஸ்து!

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சர்களுக்கு சமாந்திரமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் பதவிநிலை முன்னுரிமை பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு ஐந்தாம் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மத்திய வங்கி ஆளுநரின் பதவியானது எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆகியோருக்கு சமமாக இருக்கும் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிகழ்வுகளில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை போன்று மத்திய வங்கி ஆளுநருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.