இலங்கையில் மேலும் 52 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொவிட் 3 ஆம் அலையின் பின்னர் நாட்டில் பதிவாகியுள்ள குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 22 பெண்களும் 29 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் இன்று (27) இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14,324 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 46,249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 455, 344 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 52.3 விகிதமானவர்களுக்கும் 20 – 29 வயதிற்குட்பட்ட 48.5 விகிதமானவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.