May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களை ஆவணப்படுத்த முயற்சி!

இலங்கையில் கொவிட்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் விவரங்களை ஆவணப்படுத்தும் வகையில் ‘இலங்கை கொவிட்-19 நினைவகம்’ எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொவிட் தொற்றால் இறந்தவர்களின் வயது, பால் மற்றும் இருப்பிடம் அடங்களாக அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்டுள்ளவாறு குறித்த இணையத்தளதில் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுகின்றது.

இதுவரை அந்த இணையத்தளத்தில் 761 நபர்களின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனை  srilankac19memorial.org  என்ற இணையத்தள முகவரியின் ஊடாக பார்வையிட முடியும்.

இதனிடையே நாட்டில் மேலும் 43 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒக்டோபர் 3 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 572 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 21,004 ஆக அதிகரித்துள்ளது.