கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பருவக்காற்று காரணமாக கப்பலை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கப்பலை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கப்பல் வைத்திருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் கூறினார்.
இதேவேளை,கப்பல் அகற்றப்படுவதால் நாட்டின் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்தும் ஆராய விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கப்பலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கப்பல் வைத்திருக்கும் நிறுவனத்திடம் விசாரிக்க நிபுணர் குழுவுக்கு நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக இலங்கை மிகப்பெரிய அழிவை சந்தித்தது.
இதன் காரணமாக 1000 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளும் சுமார் 45 டொல்பின்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் ஆரம்ப கட்ட நஷ்ட ஈடாக 720 மில்லியன் ரூபாய் இலங்கைக்கு வழங்கியுள்ளது.