May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இலங்கையில் மேலும் சில ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கின!

இலங்கையை சூழ உள்ள கடற் பரப்பில் இன்றும் பல இறந்த ஆமைகளின் எச்சங்கள் மற்றும் உடல்கள்  கரை ஒதுங்கியுள்ளன.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தை தொடர்ந்து, நாட்டின் கடற்பரப்பில் கப்பலில் இருந்து வெளியான பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட கழிவுகள் நீர்கொழும்பு உட்பட மேற்கு கடற்கரைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை தொடர்ந்து பல கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.

இதுவரை அதிகமான ஆமைகள், டொல்பின்கள் மற்றும் பல மீன் இனங்களும் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன.

இவற்றின் உயிரழப்பு குறித்து பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடலில் ஏற்பட்டுள்ள இயற்கையான மாற்றம் காரணமாக ஆமைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, கழிவு அகற்றல் மற்றும் பொது சுகாதார இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.