
பொலிஸாரால் தேடப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபரான ‘பொப் மார்லி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரேவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் எல்பிட்டிய பிரதேசத்தில் இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருவளை கடல் பகுதியில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொப் மார்லியை பொலிஸார் தேடிவந்தனர்.
இவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியதுடன், இவர் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதன்படி கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய பொப் மார்லி இன்று கைதாகியுள்ளார்.