January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இலங்கையின் கடற்படையினரால் கைது!

இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 பேரை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

301 கிலோ கிராம் ஹெரோயின் வகை போதைப் பொருளுடன் வெளிநாட்டு மீன்பிடி கப்பல் ஒன்றை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

7 பேர் அடங்கிய கப்பலின் பணிக் குழுவையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த உளவுத் தகவலுக்கு அமைய கடற்படையின் புலனாய்வுத் துறையும் கடற்படையினரும் இணைந்து இந்த போதைப் பொருள் கடத்தலை தடுத்துள்ளனர்.

கைப்பற்றிய கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கப்பலின் பணிக்குழுவினரை பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினருக்கு ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கை கடந்த மாதம் மட்டகளப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.ரி.ஏ.ரி தாரக சுபேத தலைமையிலான புலனாய்வு பிரிவினரான ஜெயசேன,  பொலிஸ் உத்தியோகத்தர் சுகத் பண்டார,  எச்.பி.ஏ.எஸ். உதயகுமார, ஆர். புருசோத்தமன்,  மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொறுப்பதிகாரி  பண்டார ஆகியோர் கடற்படையுடன்,  இணைந்து இலங்கை – இந்திய கடல் பரப்பில் இரவு பகலாக   போதைப் பொருள் கடத்தல் காரரை கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.