July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர் ‘சன்ஷைன் சுத்தா’ துப்பாக்கிச் சூட்டில் பலி!

இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், குற்றக் கும்பல் உறுப்பினருமான  ‘சன்ஷைன் சுத்தா’ என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை கொட்டாவில பகுதியில் இன்று அவர் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது,  அவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய ‘சன்ஷைன் சுத்தா’ குற்றக் கும்பல் தலைவரான ‘மாகந்துரே மதுஷின்’ நெருங்கிய நண்பர் என பொலிஸார் கூறுகின்றனர்.

2019 இல் துபாயில் இடம்பெற்ற ஆடம்பர விருந்தில் மாகந்துரே மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் இவரும் ஒருவர் என்பதுடன், இவருக்கு எதிராக துபாய் நீதிமன்றத்தில் வழங்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.