January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: யொஹானியின் ‘மெனிகே மகே ஹிதே’ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது!

இலங்கையின் யொஹானி டி சில்வா பாடிய ‘மெனிகே மகே ஹிதே’ என ஆரம்பிக்கும் சிங்களப் பாடல் யூடியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பாடகர் ஒருவரின் பாடல் இவ்வாறு அதிகளவான பார்வையாளர்களைச் சென்றடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

யொஹானியின் கவர்ந்திழுக்கும் குரலும் பாடலின் இனிமையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் தாண்டி, உலகளவில் ஒலிக்கிறது.

யொஹானியின் ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் தமிழகத்திலும் பெரியளவு ஹிட் ஆகியுள்ளது.

சிங்கள பாடலின் பொருளே தெரியாமல், மில்லியன் கணக்கான பார்வையாளர்களும் யோஹானியைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடல் தமிழிலும், மலையாளத்திலும் மொழி பெயர்த்து, வெளியிடப்பட்டுள்ளது.

மெனிகே மகே ஹிதே பாடலின் தமிழ் பாட்டு ‘இரவில் ஒன்றே ஒன்று மனதில் சென்றதென தேடி’ என்று ஆரம்பிக்கிறது.

இந்தப் பாடலை பொலிவூட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பாராட்டி, டுவிட்டர் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

மெனிகே மகே ஹிதே பாடலைக் கேட்பதில் இருந்து விடுபட முடியாமல் இருப்பதாகவும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பிறந்த யொஹானி, இலங்கையின் இறுதி யுத்தத்தில் 59 ஆவது இராணுவ படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவின் மகளாவார்.