பால்மா வரிச் சலுகை காரணமாக, மாதம் ஒன்றிற்கு ரூ .572 மில்லியன் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்தார்.
இலங்கையில் பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக அரசாங்கம் கடந்த 11 ஆம் திகதி முதல் பால் மா நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கியுள்ளது.
பால் மாவின் விலையை சீராக வைத்திருப்பதற்காக அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், வரி விலக்கு காரணமாக பால் மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 35 ரூபா மட்டுமே குறைக்க முடியும் என இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
இது உலக சந்தையின் விலை அதிகரிப்பிற்கு ஈடு கொடுக்க போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முன்னதாக, கிலோ ஒன்றுக்கு 350 ரூபா விலை உயர்வை கோரியிருந்த நிலையில் வரி சலுகையின் பின்னர் , பால் மா கிலோ ஒன்றின் விலையை 260 ரூபாவால் அதிகரிக்கும்படி பால்மா இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.