May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி, பால்மா, சோளம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இருந்து பாவனையாளர்களுக்கு விநியோகிக்காமல் பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையிலேயே, இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுயுள்ளது.

நெல், அரிசி, சீனி, பால்மா, சோளம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பை உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் 7 நாட்களுக்குள் பாவனையாளர் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.