ஆசிரியர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்கிய பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்று கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையெடுக்கப்படுகின்றன. இதன்படி இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்கிய பின்னர் 2 வாரங்கள் கடந்ததும் பாடசாலைகளை திறக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கட்டம் கட்டமாகவே பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.