January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானங்கள் விற்பனை!

இலங்கையில் 3 நாட்களில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரைவாசிக்கும் குறைவான மதுபானம் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்  70 கோடி ரூபாவுக்கு விற்பனை இடம் பெற்றுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ச்சியாக கிட்டத்தட்ட  ஒரு மாதகாலம் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த திங்கட் கிழைமை பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில் 3 தினங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் இவ்வாறு மது விற்பனை இடம்பெற்றுள்ளதாக குறித்த திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4200 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ள போதிலும் கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுபான விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட தினத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மது பிரியர்கள் அதிகளவில் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.