
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பிரதமரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை- பாகிஸ்தான் இடையிலான கலாசார மற்றும் மத ரீதியான சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் வருடாந்த புலமைப்பரிசில் திட்டம் குறித்தும் உயர் ஸ்தானிகர் தெளிவுபடுத்தியுள்ளார்.