June 13, 2025 5:51:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் மாற்று தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டாம்’

Vaccinating Common Image

முதலாவது டோஸாக ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸாக சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆர்னல்ட் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 3 விதமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு சுகாதார அமைச்சு வேறு தடுப்பூசிகளை இதுவரை பரிந்துரைக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர், தடுப்பூசி நிலையங்களுக்கு செல்பவர்கள் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.