இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சிறப்பு சந்திப்பொன்று இன்று (12) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது நாட்டின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில தினங்களாக வெளிநாடுகளின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்களை சந்தித்து உதவிகளை கோரி வருகின்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பதில் பிரதிநிதி டாக்டர் ஒலிவியா நிவேராஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோருடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.