May 28, 2025 12:43:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் இலங்கையில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு விஞ்ஞான பீடத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரிடம் இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் பி.1.617 என்ற வைரஸே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு விஞ்ஞான பீடத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.