இலங்கையில் பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் நெருங்கிப் பழகியவர்களை தேடி புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
200 பேரைக் கொண்ட புலனாய்வு அதிகாரிகள், நாடு பூராகவும் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அந்த நபர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்று அதனை உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த வைரஸ் மற்றைய வைரஸை விடவும் பரவும் வேகம் அதிகமானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளளனர்.
இதன்படி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் தொடர்புகளை பேணிய மற்றும் நெருக்கமான நபர்களை தேடி புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.