பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெறப்பட்டிருந்த 72 மணிநேர தடுப்புக் காலம் இன்று காலையுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 90 நாட்கள் தடுத்து வைப்பதற்கான உத்தரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விஞ்ஞான, வாய்வழி, ஆவணப்படம் மற்றும் ஏனைய தொழில்நுட்ப ஆதாரங்களைக் கண்டறிவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.