
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை தன் மீதான அநீதி என கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரிஷாட் எம்.பி. தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.