பாகிஸ்தான்- இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறை வாய்ப்புகளை ஆராய இலங்கையின் தூதுக்குழு ஒன்று பாகிஸ்தான் சென்றுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது, அந்நாட்டு சுற்றுலா இடங்களைப் பார்வையிட அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சென்ற தூதுக்குழுவில் பௌத்த தேரர்களும் உள்ளடங்குகின்றனர்.
பாகிஸ்தானில் புராதன பௌத்த புனித இடங்களை தொடர்ந்தும் தாம் பராமரித்து வருவதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் தூதுக்குழு நேற்று பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மத ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டள்ளது.