January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே கேரள கஞ்சாவை கைப்பற்ற  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேநேரம், கேரள கஞ்சா பொதிகளையும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணையின் பின் சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மற்றும் டிப்பர் வாகனத்தை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.