
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிசார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் பேரணி நடைபெற்ற போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களில் நீதிமன்றங்களின் ஊடாக பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றிருந்த நிலையிலும் அந்தப் பேரணி திட்டமிட்டவாறு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கு திட்டமிட்டுள்ள பாதுகாப்பு தரப்பு, பேரணி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அது தொடர்பான வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.