July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன- பாகிஸ்தான் பொருளாதார திட்டம் மூலம் இலங்கையுடனான உறவை விரிவுபடுத்த இம்ரான் கான் இணக்கம்

தெற்காசியாவில் சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டாக முன்னெடுத்து வரும் பொருளாதார திட்டங்களில் இலங்கையையும் இணைத்துக்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு, பிரதமர் மகிந்தவைச் சந்தித்த போதே, இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீன- பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் பொருளாதார திட்டங்கள் நாடுகளிடையேயான உறவுகளைப் பலப்படுத்தும் என்று இம்ரான் கான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தீவிரவாதம் என்ற பொதுவான காரணியால் பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வர வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையைப் போன்று பாகிஸ்தானும் தற்போது சுற்றுலாத் துறையை முன்னேற்றும் திட்டங்களில் இறங்கியுள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் காணப்படும் பௌத்த மதத்துடன் தொடர்பாக பிரதேசங்களைப் பார்வையிட இம்ரான் கான் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.