November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை- பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாகிஸ்தான் பிரதமர் உட்பட தூதுக் குழுவினருடனான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இரு நாடுகளுக்கு மத்தியிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உட்பட பல்வேறு விடயங்களும் இதன்போது, கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் வர்த்தகம், முதலீடு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வித் துறைகளில் உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தானில் இடம் பெறவுள்ள தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் வெற்றிப் பெற இலங்கை சார்பில் முன்கூட்டிய வாழ்த்துக்களை  பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அடிமட்ட மக்களுக்காக அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது  இரு நாட்டு  அரசாங்கங்களினதும்  கொள்கையாக  உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவை தொடர்ந்து சிறந்த முறையில் பேணுவது அவசியமாகும் என்றார்.

வர்த்தக முதலீட்டாளர்களுடன் நாட்டுக்கு வருகை தந்துள்ளமையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளினதும் பாராளுமன்ற உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.