January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்படவில்லை’: வினோ நோகராதலிங்கம் எம்பி வாக்குமூலம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் நீதிமன்ற கட்டளையை மீறி கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிஸார் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ள மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸாரால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் வினோ பொலிஸ் நிலையத்துக்குச் செல்லாததால் வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்போது, தமிழ் மக்களின் உரிமைகளை முன்வைத்து நடத்தப்பட்ட ஜனநாயக போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் என்றவகையிலேயே தான் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற தடை உத்தரவுப் பத்திரம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதையும் அவர் பொலிஸாருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.