பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, அவர் பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டில் கொரோனா தொற்றின் புதிய ரக பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டே, பாகிஸ்தான் பிரதமரின் உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கான் எதிர்வரும் 22 ஆம் திகதி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இலங்கையின் பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரை உரையாற்ற அனுமதிப்பது, இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் கருதியதால், இந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்ரான் கான் 24 ஆம் திகதி இலங்கையின் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.