January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்கள் எழுச்சியை விரும்பாதவர்களே எமது போராட்டத்தை விமர்சிக்கின்றனர்”

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேராட்டம் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு விடயம் என்பதனால் அது தொடர்பாக ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொத்தவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தினூடாக அரசியல் என்பதை விட தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். இதனையே நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்று சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எமது ஒற்றுமையை விரும்பாதவர்களே இந்தப் போராட்டம் தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

மக்களிடம் எழுச்சி ஒன்று ஏற்பட்டால் தங்களுடைய பொய்கள் அடங்கிப் போகும், அரச கைக்கூலிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் என்ற அச்சமே அவர்களை இவ்வாறு சொல்ல வைக்கின்றது என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.