தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ். புறநகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் காலை 10 மணிக்கு சந்திக்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்புக்கு அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இந்தவகையான சந்திப்புக்களில் இதுவரை தனியாக அழைக்கப்படாத ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை தமிழ்பேசும் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான பேரணியின் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் முதன்முதலாக கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.