January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

நேற்றிரவு உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த உத்தரவுக்கமைய அவரின் அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது.

அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப் படையினருடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு அவர்களின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.