பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கான தமது உத்தியோக பூர்வ விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருநாள் பயணமாக எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதே காலப்பகுதியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வும் தொடங்கவுள்ளது.
இலங்கை தொடர்பான தீர்மானம் 23 ம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், முஸ்லிம் உறுப்புநாடுகளின் ஆதரவை இலங்கைக்காக திரட்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி இலங்கையின் சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.