பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதியன்று இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேநேரம் இம்ரான் கான் தனது பயணத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட குழுவினர், 5 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இலங்கை அரச தலைவர்கள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேற்கொள்கின்ற முதல் விஜயம் இதுவாகும். கொவிட் 19 தொற்றுப்பரவிலின் போது இலங்கைக்கு வருகைத் தரும் முதல் அரசத் தலைவரும் இவர் ஆவார்.