January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செவ்வாய்க் கிரகத்தில் இருந்து ‘செல்பி’ படங்களை அனுப்பிய சீனாவின் சுரொங் ரோவர்

Photo: China National Space Agency

செவ்வாய்க் கிரகத்தில் தரை இறக்கியுள்ள சீனாவின் ‘சுரொங்’ ரோவரினால் எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படங்கள் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் தேசிய விண்வெளி நிலையம் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

சுரொங் ரோவரில் இருந்த ‘வயர்லெஸ்’ கெமராக்கள் மூலம் அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

விண்கலம் இறங்கிய இடம், அதற்கு அருகிலுள்ள தரைப் பகுதி என்பனவற்றின் படங்களும், அந்த இடத்தில் விண்கலம் மற்றும் ரோவர் ஆகியன இருக்கும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

‘வயர்லெஸ்’ கெமராக்களை முன்னால் வைத்து ரோவரால் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக சீனா விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது.

சீனா தனது ‘சுரொங்’ ரோவர் விண்கலத்தை 2021 மே 15 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியது.

This slideshow requires JavaScript.

ஆறு சக்கரங்களைக் கொண்ட சுரொங் ரோவர், செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியா என்கிற இடத்தை இலக்கு வைத்து இறங்கியிருந்தது.

ரோவரில் ஓர் உயர்ந்த கம்பம் போன்ற அமைப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் படமெடுக்கவும், வழிகாட்டவும் முடியும் என்று சீன விண்வெளி அதிகரிகள் தெரிவித்துள்ளன.