January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டங்கள் தொடரும்

யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராட்சியக் கிளையின் புதிய தலைவராக எஸ்.கிருபாகரன் தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய இராட்சியக் கிளையின் புதிய நிர்வாக குழுவை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ்.கிருபாகரன்

இதன்போது தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

கல்லூரியின் புலம்பெயர்ந்த பழைய மாணவர்களை ஒன்றிணைத்து 1987 ஆம் ஆண்டில் இந்தக் கிளை உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளை சங்கமானது 378 ஆயுட்கால உறுப்பினர்களையும், 800 பழைய மாணவர்களையும் கொண்டுள்ளது.

இதனூடாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர் கல்விக்காக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் இந்த சங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கில் இயங்கும் மகாதேவா படிப்பகம் மற்றும் சபாநாயகம் படிப்பகம் ஆகிய திட்டங்கள் பிரதானமானவை.

இந்த உதவித் திட்டங்கள் மூலம், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் பலர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.