தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன் முதலாக நாளை (16) டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார்.
அதேநேரம் 17, 18 ஆம் திகதிகளில் பல முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது,தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி ஓதுக்கீட்டை அதிகரித்தல், கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
தி.மு.க தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் ,முதல் முறையாக டெல்லி செல்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.