November 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் கலாசாரத்தின் ரசிகன் நான்’ : பிரதமர் மோடி பெருமிதம்

உலகத்திலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் எனவும் தமிழ் கலாசாரத்தின் ரசிகன் தான் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உரையாற்றுகையிலேயே மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தமிழ் நாடு குறித்தும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும் பிரதமர் குறிப்பிட்டு பேசியுள்ளதுடன், மிகவும் தொன்மையான மொழி தமிழ் இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமையாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது.தமிழ் மொழி குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அத்தோடு உலகின் மிகப் பழமையான மொழி நம்முடையது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்தும் தான் பேசியதை தொகுத்து சென்னையை சேர்ந்த குரு பிரசாத் என்பவர் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நிகழ்ச்சிகளிலும், வெளிநாட்டு பயணங்களின் போதும் தமிழ் மொழியின் சிறப்பை பற்றியும், அதன் தொன்மையை பற்றியும் அவ்வப்போது பேசி வருவது குறிப்பிடத்தக்கது.