January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயற்சித்த இங்கிலாந்து பிரஜை கைது!

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயற்சித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் நபர் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இங்கிலாந்து கடவுச்சீட்டு இந்திய, இலங்கை பணம் போன்றவற்றை வைத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக கடற்கரையில் நின்றபோதே கைது செய்யப்பட்டதாகவும் விசாரனைகள் தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ ‘கேட்டமைன்’ போதை பொருளை பறிமுதல் செய்த வழக்கின் சந்தேகநபரும் இவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜோனதன் தோர்ன் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் இருந்துள்ளார்.

நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூ பிரிவு பொலிஸார் ஜோனதன் தோர்ன் மீது கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர்.