தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பாழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் 11 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் உட்பட 30 அமைச்சர்கள் இருந்த நிலையில் அவர்களில் 27 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன்,செல்லூர் கே.ராஜூ,பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ் , கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் , சேவூர் ராமச்சந்திரன் ஆகியோரும் வெற்றியடைந்துள்ளனர்.
ஆனபோதும், வெற்றிப் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.ஜெயக்குமார் தோல்விடையந்துள்ளார். அத்துடன் சி.வி.சண்முகம், வி.சரோஜா, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன் , கே.டி.ராஜேந்திர பாலாஜி , கே.சி.வீரமணி, பி.பெஞ்சமின், எம்.ஆர். விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, கே.பாண்டியராஜன் ஆகியோர் தாம் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.