தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியே அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன .
இதுவரையான வாக்கு எண்ணிக்கையில் திமுக அதிகபடியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அதற்கு அடுத்தப்படியாக அதிமுக முன்னிலையில் இருப்பதுடன், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
எனினும் வாக்கு வீதத்தில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் முன்றாம் நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
2010 ஆம் ஆண்டு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதுடன், அதன் பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07 % வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடத்தை பெற்றது.
இந்நிலையில் இம்முறையும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாமிடத்தை பெற்றுள்ளது.