November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன் இல்லையெனில் தலைநகரம் சீரழிந்துவிடும்: உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு

மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஒக்ஸிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் முழுமையாக சீரழிந்துவிடும் என டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள 120 மருத்துவமனைகளிலும் ஒக்ஸிஜன் தடுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இங்கு உடனடியாக 480 மெட்ரிக் டொன் ஒக்ஸிஜன் வழங்கப்பட வேண்டுமெனவும், இல்லையேல் 24 மணி நேரத்தில் நிலைமை மோசமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்து பூர்வமாக தரவேண்டும் எனவும், டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதுடன், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வெளியேற்றவும் நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது.

எதிர்வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனவும் கூடிய கட்டுப்பாடுகளுடன் மக்களை இருக்குமாறும் அறிவுறுத்துவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.