July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன் பற்றாக்குறை: டெல்லி மருத்துவமனையில் 25 நோயாளர்கள் உயிரிழப்பு

டெல்லி ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்திற்குள் 25 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதேநேரம் வைத்தியசாலையில் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு மட்டுமேயான ஒக்ஸிஜனே இருப்பதால் மேலும் பல நோயாளர்கள் ஆபத்தை எதிர்நோக்கும் அபாயம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் உடனடியாக ஒக்ஸிஜன் விநியோகம் செய்யுமாறு டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் மருத்துவமனையின் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் மருத்துவ ரீதியில் பயன்படுத்தப்படும் ஒக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம் அடைந்துள்ளதையடுத்து பிரபல மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

மேலும் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளால் மருத்துவர்கள் செய்வதறியாது தவித்துள்ளதுடன் வெண்டிலேட்டர், பிபப் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.