January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் தமக்கு தொற்று உறுதியானதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு அண்மையில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

 

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ராகுல், இறுதியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு பிரசாரத்துக்காக செல்லவிருந்தார்.

இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு மற்றும் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக மேற்கு வங்க பிரச்சார பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.