January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானுக்குள் இந்தியர்கள் வர தற்காலிக தடை; பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்திய பயணிகள் பாகிஸ்தானுக்கு வர அந்நாட்டு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகவேகமாக பரவி வருவதால் வான்வழி, தரைவழியாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தீவிரமாக உள்ள ‘சி’ பிரிவு நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஆசாத் உமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 1,50,61,805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 25 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 1,78,769 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.