June 15, 2025 13:21:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.