
File Photo : Facebook/அய்யா-பழநெடுமாறன்
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் தோன்றியதையடுத்து வியாழக்கிழமை நள்ளிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பழ. நெடுமாறன் நலமுடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மூத்த தலைவர் பழ. நெடுமாறன், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராடியும், குரல் கொடுத்து வருபவராவார்.
இவர் விரைவில் குணமடைய வேண்டி, திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் மற்றும் சீமான் உள்ளிட்டோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.