January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்த கப்பல் மோதி அமெரிக்காவில் முழுமையாக இடிந்து விழுந்த பாலம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதால் அந்தப் பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் இலங்கை நோக்கி பயணித்த கப்பலே இவ்வாறு அந்த பாலத்தின் மீது மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது பாலத்தின் மீது பயணித்த வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை பாலத்தில் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் பலரும் ஆற்றில் விழுந்துள்ளதாகவும் இவர்களை தேடி மீட்புக் குழுக்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல்இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் என கூறப்படுவதுடன், இவர்களுக்கு எந்தவித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.