April 27, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குஜராத்தை தோற்கடித்தது சென்னை!

Photo: Twitter/Chennai Super Kings

ஐபிஎல் – 2024 போட்டித் தொடரின் 7 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் அணியை 63 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற குஜராத் அணி முதலில் துடுப்பெடுத்தாட சென்னை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ரசீத் கான் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றிக்கமைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் இரு போட்டிகளில் வெற்றிப் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.