இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பிலுமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் வகையில் இந்த போர் நிறுத்தம் அமையவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகின்றது.
ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் 50 பிணைக் கைதிகளை விடுப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலத்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், தங்கள் வசம் உள்ள இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளதாகவும், இவர்களை விடுவிப்பதற்காக சில நிபந்தனைகளை இஸ்ரேல் அரசாங்கத்திற்கு விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கடந்த பல வாரங்களாக தொடரும் இஸ்ரேல் – காஸா போரால் இதுவரையில் 12ஆயிரத்திற்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.