January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் காஸா எல்லை!

இஸ்ரேல் இராணுவத்திற்கும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் இரு தரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி காஸா நிலப்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன்படி காஸா பகுதிக்கான மின்சாரம், நீர், எரிபொருள், உணவு உள்ளிட்ட அனைத்து விநியோகங்களையும் தடை செய்துள்ள இஸ்ரேல், அங்கே தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது காஸா எல்லைப் பகுதியில் ஆயுதங்களை தாங்கிய வாகனங்கள் சூழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கட்கிழமை மட்டும் காஸா பகுதியில் 500 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த போரை நிறுத்த தயாரில்லை என்றும், இதில் முடிவு காணாது விட மாட்டேடாம் என்றும், அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது அல்லவெனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எனினும் ஹமாஸ் அமைப்பினரும் தொடர்ந்தும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.