ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இதன்போது கட்டட இடிபாடுகளுக்கும் இன்னும் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
6.3 ரிக்டர் அளவில் அந்தப் பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும், இதனை தொடர்ந்தும் அங்கு அதிர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆப்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆயிரக் கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.